2025-26 நிதியாண்டின் 4-ம் காலாண்டில் எம்​ஆர்​எப் நிகர லாபம் 38% அதி​கரிப்பு

2025-26 நிதியாண்டின் 4-ம் காலாண்டில் எம்​ஆர்​எப் நிகர லாபம் 38% அதி​கரிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: டயர் தயாரிப்​பில் ஈடு​பட்​டுள்ள எம்​ஆர்​எப் நிறுவனத்தின் வலு​வான விற்​பனை வளர்ச்​சி​யின் காரண​மாக, 2025- 26 நிதி​யாண்​டின் 4ம் காலாண்​டில் அதன் நிகர லாபம் ரூ.702.25 கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

இது கடந்த நிதி​யாண்​டின் இதே கால​கட்​டத்​தில் ஈட்​டிய ரூ.510.5 கோடி நிகர லாபத்​தை​ விட 38 % அதி​கம் ஆகும். நான்​காம் காலாண்​டில் செயல்​பாடு​கள் மூலம் கிடைத்த ஒருங்​கிணைந்த வரு​வாய் ரூ.8,044.22 கோடி​யாக இருந்​தது, இது கடந்த ஆண்​டின் இதே காலத்​தில் ரூ.7,074.82 கோடி​யாக இருந்​தது.

ஆய்​வுக்கு உட்​பட்ட இந்த காலாண்​டில் மொத்த செல​வு​கள் ரூ.7,267.51 கோடி​யாக அதி​கரித்​துள்​ளது, இது கடந்த ஆண்​டின் இதே காலத்​தில் ரூ.6,531.04 கோடி​யாக இருந்​தது. வரும் வரு​டாந்​திர பொதுக்​கூட்​டத்​தில் பங்​கு​தா​ரர்​களின் ஒப்​புதலுக்கு உட்​பட்​டு, தலா ரூ.10 முக மதிப்​புள்ள ஒரு பங்​குக்கு ரூ.229 இறுதி லாபப்​பங்கு வழங்க அதன் வாரி​யம் பரிந்​துரை செய்​துள்​ள​தாக எம்​ஆர்​எப் தெரி​வித்​துள்​ளது.

மேலும் 2025-26 முழு நிதி​யாண்​டில் ஒருங்​கிணைந்த நிகர லாபம் ரூ.2,426.1 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. இது முந்​தைய நிதியாண்டின் ரூ.1,873.29 கோடி​யாக இருந்​தது. இதே காலத்​தில் செயல்​பாடு​கள் மூலம் கிடைத்த ஒருங்​கிணைந்த வரு​வாய் ரூ.31,149.01 கோடி​யாக இருந்​தது, இது முந்​தைய நிதி​யாண்​டில் ரூ.28,153 கோடி​யாக இருந்தது என்று எம்ஆர்எப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2025-26 நிதியாண்டின் 4-ம் காலாண்டில் எம்​ஆர்​எப் நிகர லாபம் 38% அதி​கரிப்பு
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைப்பதில் குழப்பம்: மற்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in