‘சென்னை ஒன்’ ஆப் மூலம் மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி அறிமுகம்!

‘சென்னை ஒன்’ ஆப் மூலம் மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி அறிமுகம்!
Updated on
1 min read

சென்னை: ‘சென்னை ஒன்’ செயலி வாயிலாக மின்னணு மாதாந்திர பயண அட்டை பெறும் வசதியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் இன்று மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் கும்டா இணைந்து வழங்கும் ‘சென்னை ஒன்’ செயலி வாயிலாக ரூ.1,000 (கோல்டன் டிக்கெட்) மற்றும் ரூ.2,000 (டைமண்ட டிக்கெட்) மின்னணு மாதாந்திர பயண அட்டை பெறும் வசதியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.

தற்போது, மாநகர் போக்குவரத்துக் கழக முக்கிய பேருந்து நிலையங்களில் மாதாந்திர பயணச்சீட்டு மையங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வரும் “விருப்பம் போல் பயணம் செய்யும்” ரூ.1000 மற்றும் ரூ.2000 மதிப்பிலான பயண அட்டைகளை, ‘சென்னை ஒன்’ செயலி வாயிலாக எங்கும் – எப்போதும் கைபேசியில் எளிதாக பெறக்கூடிய மின்னணு பயண அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளது.

‘சென்னை ஒன்’ செயலி வாயிலாக பெறப்படும் இந்த மின்னணு பயண அட்டை வாங்கிய நாளிலிருந்து, தொடர்ந்து 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும், இது முழுக்க முழுக்க பணமில்லா பரிவர்த்தனை முறையில் இயங்குவதால், யுபிஐ அல்லது டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் உடனடியாக கட்டணம் செலுத்தி, பயண அட்டை பெறும் வசதி உள்ளது. இதனால், பயணிகள் பாதுகாப்பான, கால விரையம் இல்லாமல், விரைவாக பயண அட்டையை பெற முடியும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.

‘சென்னை ஒன்’ ஆப் மூலம் மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி அறிமுகம்!
தவெகவில் செங்கோட்டையன் ஐக்கியம் | விஜய் ‘பலம்’ கூடுமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in