கடல் மீன் உற்பத்தி 3% உயர்வு: குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடம்

கடல் மீன் உற்பத்தி 3% உயர்வு: குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடம்
Updated on
1 min read

கொச்சி: இந்​தி​யா​வின் கடல் மீன் உற்பத்தி கடந்த 2025-ம் ஆண்டில் 3 சதவீதம் அதி​கரித்து 35.7 லட்​சம் டன்​னாக உயர்ந்துள்ளது. இதில் குஜ​ராத் மாநிலத்​தைப் பின்​னுக்​குத் தள்ளி தமிழகம் முதலிடத்​தைப் பிடித்​துள்​ளது.

இது குறித்து மத்​திய கடல் மீன் ஆராய்ச்சி நிறு​வனம் நேற்று வெளி​யிட்ட ஆய்​வறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தாவது: கடந்த ஆண்​டில் 6.85 லட்​சம் டன் மீன் உற்​பத்​தி​யுடன் தமிழகம் நாட்​டின் முதன்மை மாநில​மாக உரு​வெடுத்​துள்​ளது. இதற்கு முன்பு முதலிடத்​தில் இருந்த குஜ​ராத், மோச​மான வானிலை மற்​றும் புயல் பாதிப்​பு​கள் காரண​மாக 15 சதவீத சரிவைச் சந்​தித்து இரண்​டாம் இடத்​திற்​குத் தள்​ளப்​பட்​டது. கேரளம் 6.24 லட்​சம் டன் உற்​பத்​தி​யுடன் (2 சதவீத உயர்​வு) மூன்​றாவது இடத்​தில் நீடிக்கிறது.

அதிகம் பிடிக்கப்பட்ட மீன்

கர்​நாடகா 44 சதவீத​மும், மகா​ராஷ்டிரா 18 சதவீத​மும் மீன் உற்பத்​தி​யில் வளர்ச்​சி​யைப் பதிவு செய்​துள்​ளன. தேசிய அளவில் கானாங்​கெளுத்தி 2.70 லட்​சம் டன்​களு​டன் அதி​கம் பிடிபட்ட மீன் வகை​யாக முதலிடத்​தில் உள்​ளது. இதற்கு அடுத்​த​படி​யாக கணவாய் மீன்​கள் (2.57 லட்​சம் டன்) மற்​றும் மத்தி மீன்​கள் (2.53 லட்​சம் டன்) ஆகியவை உள்​ளன. கேரளத்​தைப் பொறுத்​தவரை மத்தி மீன்​கள் 1.68 லட்​சம் டன் பிடிபட்டு சாதனை அளவு எட்டப்பட்டுள்​ளது.

பொருளா​தார மதிப்பு

நாடு முழு​வதும் பிடிபட்ட மீன்​களின் மொத்த மதிப்பு விற்​பனை மையங்​களில் ரூ.69,254 கோடி​யாக​வும், சில்​லறை விற்​பனை சந்தை​யில் ரூ.97,702 கோடி​யாக​வும் மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. இது முந்​தைய ஆண்டை விட முறையே 10.45% மற்​றும்​ 8.43% அதி​கம்​. இவ்​​வாறு அறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கடல் மீன் உற்பத்தி 3% உயர்வு: குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடம்
திமுக ‘கூட்டணி’ ஆட்சியா? - கருத்துக் கணிப்பு முடிவுகள் மீதான விரைவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in