ரூ.31,500 கோடி மதிப்பிலான எல்ஐசி-​யின் இரண்​டாம் நிலை பங்கு விற்பனை வெற்றி

விலை சரிவைத் தடுக்க ரகசி​யம் காக்கப்பட்டதாக தகவல்
ரூ.31,500 கோடி மதிப்பிலான எல்ஐசி-​யின் இரண்​டாம் நிலை பங்கு விற்பனை வெற்றி
Updated on
1 min read

புதுடெல்லி: மத்​திய அரசு, எல்ஐசி நிறு​வனத்​தில் மேற்கொண்டுள்ள ரூ.31,500 கோடி மதிப்​பிலான, ‘ஆஃபர் ஃபார்சேல்’ (OFS) எனப்​படும் இரண்​டாம் நிலை பங்கு விற்பனையை அதீத ரகசி​யம், வேகம் மற்​றும் துல்​லிய​மான திட்டமிடலுடன் வெற்​றிகர​மாக நிகழ்த்​திக் காட்​டி​யுள்​ளது. இந்திய பங்குச் சந்தை வரலாற்​றில் இதுவே மிகப்​பெரிய ஓஎப்​எஸ் பங்கு விற்​பனை​யாகும்.

இந்த பங்கு விற்​பனை கடுமை​யான ரகசி​யத்​துடன் நடத்தப்பட்டுள்​ளது. சந்​தை​யில் பங்​கு​களின் விலை சரிவதைத் தவிர்க்க, இந்​தத் திட்​டம் குறித்து அரசுத் தரப்​பில் எவ்​வித முன்​னறி​விப்​பும் வெளி​யிடப்​பட​வில்​லை.

இந்த மாபெரும் பரிவர்த்​தனைக்​காக நியமிக்​கப்​பட்ட ஐஐஎஃப்​எல் கேபிடல், பிஎன்பி பரி​பாஸ், கோல்ட்​மேன் சாக்ஸ் மற்​றும் மோதிலால் ஓஸ்​வால் ஆகிய 4 முன்​னணி முதலீட்டு வங்​கி​களும்​கூட, பங்கு விற்​பனை தொடங்​கு​வதற்கு சில மணி நேரங்​களுக்கு முன்பு வரை இதன் விவரங்​களை அறிய​வில்​லை.

அதில் ஒரு வங்​கி​யாளர் எந்​தக் காரண​மும் கூறப்​ப​டா​மல் டெல்​லி​யில் உள்ள அரசு அலு​வல​கத்​துக்கு அவசர​மாக அழைக்​கப்​பட்​டு, அங்கு சென்ற பின்​னர்​தான் அன்று இரவே பங்கு விற்​பனை தொடங்​க​வுள்ள தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், அரசுக்கு ஆலோ​சனை வழங்​கிய இந்த 4 வங்​கி​களுமே எவ்​வித சேவைக் கட்​ட​ண​மும் வசூலிக்​காமல் இலவச​மாகச் செயல்​பட்​டன.

ஆரம்​பத்​தில் 2.5 சதவீத பங்​கு​களு​டன் தொடங்​கப்​பட்ட இந்த விற்​பனைக்​கு, நிறுவன முதலீட்​டாளர்​களிடையே கிடைத்த அமோக வரவேற்​பைத் தொடர்ந்​து, கூடு​தல் பங்​கு​கள் சேர்த்து மொத்​தம் 6.5% பங்​கு​கள் விற்​கப்​பட்​டன.

10% ஆக உயர்வு

இந்த வெற்​றிகர​மான பங்கு விற்​பனை மூலம் மொத்​தம் ரூ.31,552 கோடி நிதி திரட்​டப்​பட்​டுள்​ளது. இதன் வாயி​லாக எல்​ஐசி நிறுவனத்​தின் பொதுப் பங்​கு​தா​ரர் பங்கு விகிதம் 10 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது. இதன் மூலம் செபி நிர்​ண​யித்த 2027 மே மாத காலக் கெடு​வுக்​குள் தங்​களது வி​தி​முறை​களை இந்​நிறு​வனம் முன்​கூட்​டியே முழு​மை​யாகப்​ பூர்த்தி செய்துள்ளது.

ரூ.31,500 கோடி மதிப்பிலான எல்ஐசி-​யின் இரண்​டாம் நிலை பங்கு விற்பனை வெற்றி
தமிழர்களுக்காக தொடர்ந்து போராடிய தலைவர் வைகோ: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் புகழாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in