ரூ.10,000 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஜியோ!

ரூ.10,000 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஜியோ!
Updated on: 
1 min read

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.10,000 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் முழு விவரம் குறித்து பார்ப்போம்.

கடந்த 2015-ல் இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனத்தின் பீட்டா சோதனை பயன்பாட்டுக்கு வந்தது. 2016-ல் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு அறிமுகமானது. அது முதல் இந்திய டெலிகாம் துறையில் புதிய பாய்ச்சலை ஜியோ ஏற்படுத்தியது. தற்போது சுமார் 500 மில்லியன் பயனர்கள் ஜியோ டெலிகாம் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்திய டெலிகாம் துறையில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஜியோ வரவுக்கு முன், வரவுக்கு பின் என வகைப்படுத்த முடியும். அந்த அளவுக்கு சந்தையில், பயனர்கள், போட்டியாளர்கள் என அனைவரிடத்திலும் ஜியோ நிறுவனம் மாற்றத்தை ஏற்படுத்தியது.

பயனர்களை ஈர்க்க சிம் கார்டை இலவச பயன்பாட்டுக்கு வழங்கியது. அதன் பின்னர் ரீசார்ஜ் கட்டணங்களை அறிமுகம் செய்தது. இப்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ரூ.10,000 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டம்

ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ரூ.10,000 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை இப்போது சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி மூன்று ஆண்டுகள். இதில் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் தொலைபேசி அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிடெட் 5ஜி நெட்வொர்க் உள்ளிட்டவற்றை பயனர்கள் பெற முடியும்.

மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் + ஹாலிவுட் அக்சஸ், கேன்வா புரோ லைட் சந்தா, 50 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் உள்ளிட்ட சேவைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெலிகாம் துறையில் முன்னணி நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவும் சூழலில் ஜியோவின் இந்த ரூ.10,000 ரீசார்ஜ் திட்டம் கவனம் பெற்றுள்ளது.

ரூ.10,000 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஜியோ!
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை டிஎல்எஸ் முறையில் வீழ்த்தியது இந்தியா

X