மீண்டும் என்விடியா நிறுவன சிஇஓ-வாக ஜென்சன் ஹுவாங் நியமனம்

ஜென்சன் ஹுவாங்

ஜென்சன் ஹுவாங்

Updated on: 
1 min read

நியூயார்க்: மீண்டும் என்விடியா நிறுவன தலைமை செயல் அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் அமெரிக்க அரசின் அழுத்தம் இருக்கலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.

சீன உளவாளி பெண் உடன் ரகசிய உறவில் இருந்ததாக ஜென்சன் ஹுவாங் குற்றச்சாட்டு வெளியானது. அதை அவர் ஒப்புக் கொண்டார். இந்த சூழலில் நவம்பர் மாத தொடக்கத்தில் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகினார்.

தேசிய பாதுகாப்பு சார்ந்து அவர் தவறான செயல் எதுவும் செய்யவில்லை என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக கடிதமும் என்விடியா நிறுவனத்துக்கு அனுப்பியதாக தகவல். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜென்சன் ஹுவாங் மீனும் சிஇஓ-வாக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிபர் ட்ரம்ப், முன்னணி டெக் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலன் கருதி ஒருமனதாக மீண்டும் ஜென்சன் ஹுவாங்கை சிஇஓ பொறுப்பில் நியமிப்பதாக என்விடியா அறிவித்துள்ளது.

என்ன நடந்தது?

என்விடியா நிறு​வனத்​தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங், அமெரிக்க உளவுத் துறை​யால் சீன உளவாளியாக சந்​தேகிக்​கப்​படும் சீனத் தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங்​குடன் தனக்கு ரகசிய தொடர்பு இருந்​ததை அண்​மையில் ஒப்​புக் கொண்டார்.

இந்நிலை​யில், அவருக்கு என்​வி​டியா துணைத் தலை​வ​ராக பதவி வகித்து வரும் கிம்​பர்லி பாவல் உடனும் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​தது. இந்த சூழலில், என்விடியா சிஇஓ பொறுப்பை அவர் ராஜினாமா செய்தார்.

<div class="paragraphs"><p>ஜென்சன் ஹுவாங்</p></div>
Lava Smart 4 Pro போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

X