ஐஆர்சிடிசி - ஸ்விக்கி இணைந்து 152 ரயில் நிலையங்களுக்கு உணவு சேவை விரி​வாக்​கம்

ஐஆர்சிடிசி - ஸ்விக்கி இணைந்து 152 ரயில் நிலையங்களுக்கு உணவு சேவை விரி​வாக்​கம்
Updated on
1 min read

மும்பை: ரயில் பயணிகள் உணவு பெறும் வசதியை மேம்​படுத்​தும் வகை​யில், ஐஆர்சிடிசி நிறு​வனத்​துடன் இணைந்து ‘புட் ஆன் டிரெ​யின்’ எனும் உணவு சேவையை இந்​தியா முழு​வதும் 152 ரயில் நிலை​யங்​களுக்கு விரிவுபடுத்​தி​யுள்​ள​தாக ஸ்விக்கி நிறு​வனம் நேற்று தெரி​வித்​தது.

இதுகுறித்து ஸ்விக்கி நிறு​வனத்​தின் துணைத் தலை​வர் தீபக் மாலு கூறிய​தாவது: கடந்த 2025-ல் 70 ரயில் நிலை​யங்​களில் மட்​டுமே இருந்த உணவு சேவை, 2026 பிப்​ர​வரிக்​குள் 152 நிலை​யங்​களுக்கு விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது. நாடு முழு​வதும் பயணி​களிடையே நில​வும் பல்​வகை தரமான உணவு​களுக்​கான தேவையைப் பூர்த்தி செய்​யும் நோக்​கில் ஐஆர்​சிடிசி மூல​மாக இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

பிராந்​திய அளவி​லான முக்​கிய ரயில் நிலை​யங்​களி​லும் கவனம் செலுத்த ஸ்விக்கி திட்​ட​மிட்​டுள்​ளது. இதில் ம.பி.யின் இட்​டார்​சி, தமிழகத்​தின் திருநெல்​வேலி மற்​றும் மேற்கு வங்​கத்​தின் கரக்​பூர் உள்​ளிட்ட ரயில் நிலை​யங்​கள் முக்​கி​யத்​து​வம் பெற்​றுள்​ளன.

ஹோலி சிறப்பு சலுகை​யாக பிப்​ர​வரி 28 முதல் மார்ச் 8-ம் தேதி வரை ரயில் பயணி​களுக்​காகச் சிறப்பு உணவுப் பட்​டியலை ஸ்​விக்​கி அறிமுகப்​படுத்​தியுள்​ளது. இவ்​வாறு தீபக்​ கூறி​னார்​.

ஐஆர்சிடிசி - ஸ்விக்கி இணைந்து 152 ரயில் நிலையங்களுக்கு உணவு சேவை விரி​வாக்​கம்
வெற்றிக் கணக்கை தொடங்குமா நாம் தமிழர் கட்சி? - சீமான் வியூகமும், களச் சூழலும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in