

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய மதிப்பீட்டாளர்கள் அமைப்பான ‘தி இன்ஸ்டிடியூஷன் ஆஃப் வேல்யூயர்ஸ்' (ஐஓவி) மற்றும் ‘குரோடிஸ்' நிறுவனம் இணைந்து, சொத்துச் சேவைகள் மற்றும் மதிப்பீட்டுத் துறையில் வெளிப்படைத் தன்மையையும், நம்பகத் தன்மையையும் மேம்படுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இது குறித்து 5 ஜி-எக்ஸ் குளோபல் புரோப்டெக் நிர்வாக இயக்குநர் சுதாகர் விஜய் சாரதி கூறியதாவது: கடந்த 1968ம் ஆண்டு தொடங்கப்பட்டு நாடு முழுவதும் 35,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஐஓவி, மதிப்பீட்டுத் துறையில் உலகத் தரம் வாய்ந்த நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது.
தற்போது ‘5 ஜி-எக்ஸ் குளோபல் புரோப் டெக்' நிறுவனத்தின் அங்கமான குரோடிஸ் உடன் இணைந்துள்ளதன் மூலம், டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, வீடு வாங்குபவர்கள், விற்பனையாளர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தகுதியான மதிப்பீட்டாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களை எளிதில் அணுக இந்த குரோடிஸ் தளம் வழிவகை செய்கிறது. இதன் ஒரு பகுதியாக, ஹோம் பையர்ஸ் ரிப்போர்ட் என்ற சிறப்புச் சேவை மூலம், வீடு வாங்குபவர்களுக்குத் தேவையான அனைத்துச் சட்டப்பூர்வ மற்றும் தொழில் நுட்ப ஆவணச் சரிபார்ப்புகள் உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.