ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காப்பீடு திட்டம் முதன்முறையாக அறிமுகம்!

காளை உயிரிழந்தால் உரிமையாளர்களுக்கு இழப்பீடு கிடைக்கும்.
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காப்பீடு திட்டம் முதன்முறையாக அறிமுகம்!
Updated on
1 min read

மதுரை: முதன் முறையாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, காப்பீடு செய்யும் நடைமுறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடக்கும்.

இதற்காக பலரும் காளைகளை ஆண்டு முழுவதும் பராமரித்து தயார்படுத்தி வருகின்றனர். கால்நடைகளைப்போல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காப்பீடு வசதி இதுவரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், முதன்முறையாக பால் தரும் பசுமாடு, எருமை மாடுகளை அடுத்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் காப்பீடு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத் தின் ஆலோசகரும், கால்நடை மருத்துவருமான என்.கே.புத்தன் கூறியதாவது: ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் சந்தை மதிப்பீட்டு தொகையை வழங்க காப்பீடு கால்நடைகள் பட்டியலில் இடம்பெற உள்ளது. பொதுவாக காப்பீடு செய்த பசுமாடு, எருமை மாடுகளுடைய காதில் அடையாள குறியீடு (தோடு) அணிவர்.

<div class="paragraphs"><p>ஸ்கேன் செய்யப்படும் ஜல்லிக்கட்டு காளைகளின் மூக்குப் பகுதி ரேகை. </p></div>

ஸ்கேன் செய்யப்படும் ஜல்லிக்கட்டு காளைகளின் மூக்குப் பகுதி ரேகை.

ஆனால், ஜல்லிக்கட்டு காளைகள் போட்டிகளில் பங்கேற்பதால் அதுபோன்று தோடு அணிய முடியாது. அதனால், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு புதிய தொழில்நுட்ப அடிப்படையில் அதன் மூக்குப் பகுதியில் உள்ள ரேகையை ஸ்கேன் செய்து காப்பீடு செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

காளைகளின் மூக்குப் பகுதி ரேகை மாட்டுக்கு மாடு வேறுபடும். ஓரிரு வாரங்களில் ஜல்லிக்கட்டு காளைகள் காப்பீட்டு திட்டத்தில் ஓராண்டுக்கு சேர்க்கப்பட உள்ளன. எப்படி கால்நடைகள் இறப்பதற்கு காப்பீடு தொகை வழங்கப்படுகிறதோ அதுபோல சந்தை மதிப்பீடு தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஓராண்டுக்கு காப்பீடு செய்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு எந்த பாதிப்பும் வராமல் இருந்தால், தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் 3 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை காப்பீடு செய்யப்பட உள்ளது.

ஜல்லிக்கட்டு காளைகள் 3 வயதில் இருந்துதான் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பிக்கிறது. அதனால், 3 வயதில் இருந்து அவற்றை காப்பீடு செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. காளை ஏதாவது காரணத்தால் உயிரிழந்தால் இடைத்தரகர் இன்றி நேரடியாக காளை உரிமையாளர் வங்கிக் கணக்கில் இழப்பீடு தொகை செலுத்தப்படும்.

ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள காளைக்கு ரூ.6 ஆயிரம் வரை பிரீமியம் தொகை செலுத்த வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காப்பீடு திட்டம் முதன்முறையாக அறிமுகம்!
புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து ஆலை கண்டுபிடிப்பு - ரூ.30 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in