42 மாதங்​களில் இல்​லாத வகை​யில் ஏப்​ரலில் மொத்த விலை பணவீக்கம் 8.3% ஆக உயர்வு

42 மாதங்​களில் இல்​லாத வகை​யில் ஏப்​ரலில் மொத்த விலை பணவீக்கம் 8.3% ஆக உயர்வு
Updated on
1 min read

புதுடெல்லி: ஏப்​ரல் மாதத்​தில் நாட்​டின் மொத்த விலை பணவீக்கம் 42 மாதங்​களில் இல்​லாத வகை​யில் 8.3% ஆக உயர்ந்துள்​ளது.

மேற்கு ஆசிய போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்​ணெய் மற்​றும் எரி​வாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்​பட்​டது. இதனால், உலகம் முழு​வதும் பெட்​ரோல், டீசல், எரி​வாயு விலை சுமார் 50 % அதி​கரித்​துள்​ளது.

அதே​நேரம் இந்​தி​யா​வில் பெட்​ரோல், டீசல், சமையல் எரி​வாயு விலை உயர்த்​தப்​பட​வில்​லை. எனினும் வர்த்தக எரி​வாயு சிலிண்டர் விலை உயர்த்​தப்​பட்​ட​தால், ஓட்​டல்​களில் உணவுப் பொருட்​களின் விலை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இது​போல, எரி​வாயு விநி​யோக சிக்​கல் காரண​மாக தொழிற்​சாலை உற்​பத்தி பாதிக்கப்​பட்​டுள்​ளது.

இந்த சூழலில் நாட்​டின் மொத்த விலை பணவீக்க (டபிள்​யுபிஐ) விவரத்தை மத்​திய அரசு நேற்று வெளி​யிட்​டது. இதன்​படி, டபிள்​யுபிஐ 42 மாதங்​களில் இல்​லாத வகை​யில், கடந்த ஏப்​ரல் மாதத்தில் 8.3 % ஆக உயர்ந்​துள்​ளது. இது மார்ச் மாதத்​தில் 3.88% ஆக இருந்த நிலை​யில், ஏப்​ரலில் இரு​மடங்​குக்கு மேல் அதிகரித்துள்​ளது.

இதில் அதி​கபட்​ச​மாக எரிபொருள்​-மின்​சார பணவீக்​கம் 24.71% அதி​கரித்​துள்​ளது. இது கடந்த 2021-ம் ஆண்டு அக்​டோபர் மாதத்துக்​குப் பிறகு அதிக அளவாகும். மார்ச் மாதத்​தில் இது 1.05% ஆக இருந்​தது. நேற்று முன்​தினம் வெளி​யான புள்​ளி​ விவரப்​படி, நாட்டின் ஏப்​ரல் மாதத்​துக்​கான சில்​லரை பண வீக்​கம் (சிபிஐ) 3.48% ஆக உயர்ந்​தது. இது மார்ச் மாதத்​தில் 3.4% ஆக இருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

சென்​செக்ஸ் 790 புள்ளி உயர்வு:

இந்​திய பங்​குச் சந்​தைகள் நேற்று கணிச​மான உயர்​வுடன் முடிந்​தது. சென்​செக்ஸ் 790 புள்ளிகள் உயர்ந்து 75,399-லும் நிப்டி 277 புள்​ளி​கள் உயர்ந்து 23,690-லும் முடிவடைந்​தது. இதனால் முதலீட்​டாளர்​களின் சொத்து மதிப்பு ரூ.5 லட்​சம் கோடி அதி​கரித்​தது. இதில் அதானி என்​டர்​பிரைசஸ் (9%), சிப்லா (8%), பார்தி ஏர்​டெல் (5%) ஆகிய பங்​கு​கள் அதிக உயர்வை சந்​தித்​தன. எனினும், தகவல் தொழில்​நுட்​பத் துறை சார்ந்த பங்​கு​கள் அதிக சரிவை சந்​தித்​தன.

42 மாதங்​களில் இல்​லாத வகை​யில் ஏப்​ரலில் மொத்த விலை பணவீக்கம் 8.3% ஆக உயர்வு
யார் இந்த அஸ்ரா கார்க்? - உளவுத் துறை ஐ.ஜி. பின்புலம் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in