இந்தியாவின் ஏற்றுமதி 29.9 சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவின் ஏற்றுமதி 29.9 சதவீதம் அதிகரிப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: கடந்த அக்​டோபர் மாதத்​தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 29.9 சதவீதம் அதி​கரித்து 89.99 பில்​லியன் டாலராக உயர்ந்​துள்​ளது.

இதன் மூலம், நாட்​டின் ஒட்​டுமொத்த வர்த்​தகப் பற்​றாக்​குறை 20.09 பில்​லியன் டாலராகக் குறைந்​துள்​ளது என்று மத்​திய வர்த்தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. கடந்த ஆண்டு அக்​டோபரில் நாட்​டின் ஒட்​டுமொத்த ஏற்​றுமதி 69.27 பில்​லியன் டாலராகவும், வர்த்​தகப் பற்​றாக்​குறை 25.15 பில்லியன் டாலராகவும் இருந்​தது.

கடந்த அக்​டோபரில் ஒட்​டு மொத்த இறக்​குமதி 94.42 பில்​லியன் டாலரி​லிருந்து 110.07 பில்​லியன் டாலராக அதி​கரித்​த போதிலும், ஏற்​றுமதி வளர்ச்சி வேக​மாக இருந்​ததால் வர்த்​தகப் பற்​றாக்​குறை கட்​டுக்​குள் வந்​துள்​ளது. சரக்கு ஏற்​றுமதி 45.06 சதவீதம் வளர்ச்சியடைந்து, வரலாறு காணாத அளவாக 49.47 பில்​லியன் டாலரை எட்​டியுள்​ளது (கடந்த ஆண்டு 34.11 பில்​லியன் டாலர்).

அதேசமயம், கச்சா எண்​ணெய் விலை உயர்வு காரண​மாக சரக்கு இறக்​குமதி 76.69 பில்​லியன் டாலரி​லிருந்து 89.35 பில்​லியன் டாலராக அதி​கரித்​ததால், சரக்கு வர்த்​தகப் பற்​றாக்​குறை 39.88 பில்​லியன் டாலராக உயர்ந்​தது.

ஆனால், சேவை​கள் துறை ஏற்றுமதி 35.17 பில்​லியன் டாலரி​லிருந்து 40.51 பில்​லியன் டாலராக அதி​கரித்​திருக்​கும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. சேவை​கள் இறக்குமதி 20.72 பில்​லியன் டாலராக மட்​டுமே உள்​ள​தால், சேவைகள் துறை​யில் கிடைத்த உபரி வரு​வாய் சரக்கு வர்த்​தகப் பற்​றாக்​குறையை ஈடுகட்​டப் பெரிதும் உதவியுள்​ளது.

இந்தியாவின் ஏற்றுமதி 29.9 சதவீதம் அதிகரிப்பு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம்: ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்துக்கு டெண்டர்

X