2026-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.82 லட்சம் கோடியை எட்டி சாதனை

2026-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.82 லட்சம் கோடியை எட்டி சாதனை
Updated on
1 min read

சண்டிகர்: ஏற்றுமதி​யாளர்​கள், தொழில்​துறை அமைப்​பு​கள் மற்றும் விவ​சாய உற்​பத்​தி​யாளர் அமைப்​பு​களின் மாநாடு சண்டிகரில் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற மத்​திய வர்த்தக அமைச்​சகத்​தின் கூடு​தல் செய​லா​ளர் நிதின் குமார் யாதவ் ஆற்றிய உரை​யில் கூறிய​தாவது:

2014-15 நிதி​யாண்​டில் 468 பில்​லியன் அமெரிக்க டாலராக இருந்த நாட்​டின் ஒட்​டுமொத்த ஏற்​றுமதி, 2025-26 நிதி​யாண்​டில் இது​வரை இல்​லாத அளவாக 863 பில்​லியன் டால​ராக (ரூ.82 லட்​சம் கோடி) உயர்ந்​துள்​ளது. ஏற்​றுமதி ஆண்​டுக்கு 5.7% கூட்டு வளர்ச்சி அடைந்துள்​ளது.

இந்தக் கால​கட்​டத்​தில், சரக்கு ஏற்​றுமதி 310 பில்​லியன் அமெரிக்க டாலரிலிருந்து 442 பில்​லியன் அமெரிக்க டால​ராக அதிகரித்துள்ளது. சேவை ஏற்​றுமதி 158 பில்​லியன் அமெரிக்க டாலரிலிருந்து ஆண்​டுக்கு 9.3% கூட்டு வளர்ச்சி விகிதத்​தில் 421 பில்​லியன் டால​ராக உயர்ந்​துள்​ளது.

மேலும், பெட்​ரோலி​யம் அல்​லாத பொருட்​களின் ஏற்​றுமதி 387.9 பில்​லியன் அமெரிக்க டாலர் என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது. இது இந்​திய ஏற்​றும​தி​யின் பன்​முகத்தன்மையையும் வெளிப்படுத்​துகிறது.

100 பில்​லியன் டாலர் நேரடி அந்​நிய முதலீட்டு வாக்​குறு​தி​யுடன் கூடிய இந்​தி​யா- ஐரோப்பா இடையி​லான தடையற்ற வர்த்​தகம் மற்​றும் பொருளா​தார கூட்டு ஒப்​பந்​தம், இந்​தி​யா​வின் 98% ஏற்​றும​தி​க்கு வரி இல்லா அனு​ம​தியை வழங்​கு​கிறது.

அதிக வரு​வாய் ஈட்​டும் 27 பொருளா​தா​ரங்​களை உள்​ளடக்​கிய இந்​தி​யா-ஐரோப்​பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் (2026), 99% இருதரப்பு வர்த்​தகத்​திற்கு வரி சலுகைகளு​டன் ரூ.3.2 லட்​சம் கோடி மதிப்​பிலான இந்​திய ஏற்​றும​திக்கு ஆதர​வளிக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

2026-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.82 லட்சம் கோடியை எட்டி சாதனை
‘திக்கற்ற’ திரிணமுல் காங்கிரஸ்... மேற்கு வங்க அரசியலில் மம்தா சறுக்கியது எங்கே?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in