ஈரான் போர் காரணமாக இந்திய காபி ஏற்றுமதி பாதிக்கும்: நிக்கேய் ஆசியா நிறுவனம் தகவல்

ஈரான் போர் காரணமாக இந்திய காபி ஏற்றுமதி பாதிக்கும்: நிக்கேய் ஆசியா நிறுவனம் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: ‘‘ஈரான் போர் காரண​மாக, மேற்கு ஆசி​யாவில் இந்​தி​யா​வின் காபி ஏற்றுமதி 80 சதவீதம் வரை பாதிக்கலாம்’’ என நிக்​கேய் ஆசியா நிறு​வனம் தெரிவித்துள்​ளது.

காபி உற்​பத்​தி​யில் பிரேசில் மற்​றும் வியட்​நாம் உள்​ளிட்ட நாடு​களுக்கு அடுத்​த​படி​யாக, 7-வது இடத்​தில் இந்​தியா உள்​ளது. இந்​திய காபி துபாய், குவைத் மற்​றும் ரியாத் ஆகிய நகரங்​களில் உள்ள உணவு விடு​தி​களில் பல ஆண்டு​களாக முக்​கிய இடத்தை பிடித்​துள்​ளது. ஆனால் தற்​போது ஈரான் போர் காரண​மாக கப்​பல் போக்​கு​வரத்து முடங்​கி, சரக்கு போக்​கு​வரத்து செல​வு​கள் உயர்ந்​துள்​ளன.

இதனால் மேற்கு ஆசிய சந்​தை​யில், இந்​தி​யா​வின் காபி ஏற்​றுமதி 80 சதவீதம் வரையில் பாதிப்பை சந்​திக்​கலாம் என காபி தொழில்​துறை அஞ்​சுவ​தாக நிக்​கேய் ஆசியா நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ஏற்​பட்​டுள்ள கப்​பல் போக்கு​வரத்து பிரச்​சினை நீண்​ட​கால நெருக்​கடி​யாக மாறும் என்று இந்​திய காபி ஏற்​றும​தி​யாளர்​கள் கருதுகின்றனர்.

இந்​தியா தனது காபி உற்​பத்​தி​யில் 70 சதவீதத்தை ஏற்றுமதி செய்​கிறது. கடந்த சில ஆண்​டு​களாக மேற்கு ஆசி​யா​வில் இந்​தியா தனது காபி சந்​தையை தொடர்ந்து விரிவுபடுத்​தி​யது. ஐக்​கிய அரபு அமீரகம், ஜோர்​டான் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடு​களுக்கு கடந்த 2024-ல் இந்​தி​யா​வின் காபி ஏற்​றும​தி, மொத்த ஏற்​றும​தி​யில் 16 சதவீதத்​துக்​கும் மேல் இருந்​தன.

80 சதவீத இழப்பு

இது குறித்து இந்​திய காபி ஏற்​றும​தி​யாளர்​கள் சங்​கத்​தின் தலை​வர் ரமேஷ் ராஜா கூறுகை​யில், ‘‘மேற்கு ஆசிய சந்தை​யில் வரும் மாதங்​களில், இந்​திய காபி ஏற்றுமதியாளர்​கள் 80% வரை இழப்​பைச் சந்​திக்க நேரிடும். பெரும்​பாலான இந்​திய காபிகள் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகவே அனுப்​பப்​படு​வ​தால், ஏற்​றுமதி தாமத​மாகிறது அல்​லது வேறு பாதைகளுக்கு மாற்றப்படுகிறது. இதனால் லாபம்​ குறைந்​து வரு​கிறது’’ என்​றார்​.

ஈரான் போர் காரணமாக இந்திய காபி ஏற்றுமதி பாதிக்கும்: நிக்கேய் ஆசியா நிறுவனம் தகவல்
தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in