போர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவின் நிகில் காமத்! - உலக அளவில் 40 வயதுக்கு உட்பட்ட 40 இளம் கோடீஸ்வரர்கள்

போர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவின் நிகில் காமத்! - உலக அளவில் 40 வயதுக்கு உட்பட்ட 40 இளம் கோடீஸ்வரர்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: போர்ப்ஸ் நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள 40 வயதுக்கு உட்​பட்ட 40 இளம் கோடீஸ்​வரர்கள் பட்​டியலில் இந்​தி​யா​வின் நிகில் காமத் இடம்​பிடித்துள்​ளார்.

இளம் நிறு​வனர்​கள், தொழில்​ நுட்​பம் மற்​றும் புது​மை​களின் மூலம் எவ்​வாறு பெரும் செல்​வத்தை உரு​வாக்​கு​கிறார்​கள் என்​பதை எடுத்துக்​காட்​டும் வகை​யில் 40 வயதுக்கு உட்​பட்ட 40 இளம் கோடீஸ்வரர் பட்​டியலை போர்ப்ஸ் நிறு​வனம் தயாரித்​துள்​ளது.

இதில், இந்​தி​யா​விலிருந்து 39 வயதான ஸெரோதா இணை நிறுவனரும் தலைமை நிதி அதி​காரி​யு​மான நிகில் காமத் 3.3 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்​புடன் பட்​டியலில் 20-ஆவது இடத்தை பிடித்​துள்​ளார். நிகில் காமத்​துடன் சேர்த்து மொத்​தம் இந்த பட்​டியலில் 4 இந்​திய வம்​சாவளி தொழில்​ முனை​வோர்​கள் இடம்​ பெற்​றுள்​ளனர்.

இவர்​களின் ஒட்​டுமொத்த சொத்து மதிப்பு 11 பில்​லியன் டாலர் ஆகும். இருப்​பினும், இந்​தி​யா​விலிருந்து இந்த பட்​டியலில் இடம்​பிடித்​தது நிகில் காமத் மட்​டுமே. இவரை தவிர, நியூ​யார்க்கை சேர்ந்த இந்​திய வம்​சாவளி ஆங்​கூர் ஜெயின் 3.4 பில்​லியன் டாலர் நிகர சொத்து மதிப்​புடன் போர்ப்ஸ் பட்​டியலில் 19- வது இடத்​தில் உள்​ளார்.

இவருக்கு வயது 35. பில்ட் ரிவார்ட்ஸ் நிறு​வனத்​தின் சிஇஓ மற்​றும் நிறு​வன​ராக ஆங்​குர் ஜெயின் உள்​ளார். இவர்​களை தவிர ஆதர்ஷ் ஹிரேமத் மற்​றும் சூர்யா மிதா (இரு​வருக்​கும் வயது 22) ஆகிய இருவரும் ஒன்​றாக 27-வது இடத்​தைப் பிடித்​துள்​ளனர். இவர்​கள் ஏஐ அடிப்​படையி​லான ஆட்​சேர்ப்பு ஸ்டார்ட்​அப்​பான மெர்​கோர் நிறு​வனத்​தின் இணை நிறு​வனர்​களாவர். இவர்​களின் நிகர சொத்​து ​ம​திப்பு என்​பது தலா ரூ.1,826 கோடி என்​பது குறிப்பிடத்தக்​கது.

ஆதர்ஷ் ஹிரேமத் பே ஏரியாவில் வளர்ந்து, கணினி அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை ஒருங்கிணைந்து பெற்றவர். சூர்யா மிதா மவுண்டன் வியூவில் பிறந்து தனது குழந்தைப் பருவத்தை சான் ஜோஸில் கழித்தார். அவர் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் இளங் கலைப் பட்டம் பெற்றவர்.

போர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவின் நிகில் காமத்! - உலக அளவில் 40 வயதுக்கு உட்பட்ட 40 இளம் கோடீஸ்வரர்கள்
மெரினாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி: ஏராளமானோர் கண்டு ரசித்தனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in