வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா - அமெரிக்கா இன்று பேச்சுவார்த்தை

வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா - அமெரிக்கா இன்று பேச்சுவார்த்தை
Updated on
1 min read

புதுடெல்லி: இடைக்​கால வர்த்தக ஒப்​பந்​தத்தை இறுதி செய்​வது தொடர்​பாக, இந்​தி​யா - அமெரிக்கா இடையே டெல்​லி​யில் இன்று முக்​கிய பேச்​சு​வார்த்தை தொடங்​கு​கிறது.

கடந்த ஆண்டு ஜனவரி​யில் அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்ற பிறகு உலக நாடுகளுக்கு அதிக வர்த்தக வரி விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால், அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பு செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டது. அதன்பிறகு தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி 15 சதவீத வரியை உலக நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்தார்.

ஏற்கெனவே இந்தியாவுக்கு ட்ரம்ப் 18 சதவீத வரி விதித்திருந்தார். இந்த குழப்​ப​மான சூழலில் வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக இந்​தி​யா, அமெரிக்கா இடையே தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வந்​தது. கடந்த ஏப்​ரல் 20 முதல் 23-ம் தேதி வரை அமெரிக்​காவில் இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இதன் தொடர்ச்​சி​யாக அமெரிக்​கா​வின் சிறப்பு வர்த்தகக் குழு​வினர் இந்​தி​யா​வுக்கு வருகை தந்​துள்​ளனர். தலைநகர் டெல்​லி​யில் இன்று இருதரப்பு இடையே வர்த்தக பேச்​சு​வார்த்தை தொடங்​கு​கிறது.

அமெரிக்க குழு​வுக்கு பிரெண்ட் லிஞ்​சும் இந்​தியக் குழு​வுக்கு மத்​திய வர்த்தகத் துறை கூடு​தல் செய​லர் தர்​பன் ஜெயினும் தலைமை தாங்​கு​கின்​றனர். வரும் 4-ம் தேதி வரை பேச்​சு​வார்த்தை தொடர்ந்து நடை​பெற உள்​ளது. இதுதொடர்​பாக இந்​தி​யா​வுக்​கான அமெரிக்கதூதர் செர்​ஜியோ கோர் நேற்று முன்​தினம் கூறும்​போது, “அமெரிக்​கா, இந்​தியா இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தத்​தின் 99 சதவீதப் பணி​கள் நிறைவடைந்து விட்​டன. ஒரு சதவீதம் மட்​டுமே இறுதி செய்​யப்பட வேண்​டும். ஜூன் 1-ம் தேதி டெல்​லி​யில் தொடங்​கும் இரு தரப்பு பேச்​சு​வார்த்​தை​யில் அந்த ஒரு சதவீத​மும் நிறைவு செய்​யப்​படும்" என்று தெரி​வித்​தார்.

வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா - அமெரிக்கா இன்று பேச்சுவார்த்தை
27 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஜூன் 18-ல் தேர்தல்: இன்று வேட்பு மனு தாக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in