“இந்​தி​யா​வுட​னான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு

“இந்​தி​யா​வுட​னான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு
Updated on
1 min read

வாஷிங்​டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் புதன்​கிழமை நடை​பெற்ற ‘நிலக்​கரி​யின் சாம்​பியன்’ என்ற நிகழ்ச்​சி​யில் அதிபர் ட்ரம்ப் பேசி​ய​தாவது: கடந்த சில மாதங்​களில் ஜப்​பான், கொரி​யா, இந்​தியா உட்பட பல நாடு​களு​டன் நிலக்​கரி ஏற்​றும​தியை அதி​கரிக்க வரலாற்றுச் சிறப்​புமிக்க ஒப்​பந்​தங்​களைச் செய்துள்ளோம்.

நாங்​கள் இப்​போது உலகம் முழு​வதும் நிலக்​கரியை ஏற்றுமதி செய்​கிறோம். நமது நிலக்​கரி​யின் தரம் உலகின் மிகச்​சிறந்த ஒன்​றாகக் கருதப்​படு​கிறது. இதன்​மூலம் அமெரிக்​கா​வின் நிலக்​கரி ஏற்​றுமதி பெரு​மள​வில் அதிகரிக்​கும். இவ்​வாறு ட்ரம்ப் தெரி​வித்​தார்.

அமெரிக்கா​வும் இந்​தி​யா​வும் ஓர் இடைக்​கால வர்த்தக ஒப்​பந்​தத்​துக்​கான கட்​டமைப்பை எட்​டி​யுள்​ள​தாக இரு நாடுகளும் கடந்த வாரம் அறி​வித்​தன. இதன்​படி, அமெரிக்கா​வின் அனைத்து தொழில் துறை சார்ந்த பொருட்​கள், உணவு மற்​றும் விவ​சாயப் பொருட்களுக்கான வரி​களை இந்​தியா நீக்​கும் அல்​லது குறைக்​கும்.

அடுத்த 5 ஆண்​டு​களில் இந்​தியா 500 பில்​லியன் அமெரிக்க டாலர் மதிப்​பிலான அமெரிக்​கப் பொருட்​களை வாங்க திட்ட​மிட்​டுள்​ளது. விமானங்​கள் மற்​றும் அதன் பாகங்​கள், விலைம​திப்​பற்ற உலோகங்​கள், தொழில்​நுட்ப தயாரிப்புகள் மற்​றும் கோக்​கிங் நிலக்​கரி ஆகியவை இதில் அடங்கும்.

“இந்​தி​யா​வுட​னான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு
மீண்டும் தமிழகம் வருகிறார் கிரிஷ் சோடங்கர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in