இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் நாளை முதல் அமல்: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் நாளை முதல் அமல்: முக்கிய அம்சங்கள் என்னென்ன?
Updated on
1 min read

புது டெல்லி: இந்தியா - இங்கிலாந்து இடையி​லான வர்த்தக ஒப்பந்தம் வரும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இந்​தி​யா - இங்​கிலாந்து இடையிலான ஒருங்​கிணைந்த பொருளா​தார மற்​றும் வர்த்தக ஒப்​பந்​தம் கடந்த ஆண்டு கையெழுத்​தானது. இந்த ஒப்பந்தமானது நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க ஒப்​பந்​தத்​தின் மூலம் இந்தியா​வின் 99% ஏற்​றுமதி பொருட்​கள் மீது விதிக்கப்படும் சுங்க வரி​கள் நீக்கப்பட உள்​ளன. இதனால் இரு​ நாடு​களுக்​கு இடையி​லான வர்த்தகம் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு அதி​கரிக்​கும் என எதிர்பார்க்கப்படு​கிறது.

இந்த ஒப்​பந்​தம் ஜவுளித் துறை, ரத்​தினங்​கள் மற்​றும் நகைகள், மருந்​துத் துறை, வாக​னங்​கள் மற்​றும் வாகன உதிரி​பாகங்​கள் போன்ற முக்​கிய துறை​களுக்கு பெரும் நன்​மை​களை வழங்​கும் எனக் கருதப்​படு​கிறது.

மேலும், இந்​திய நுகர்​வோர் இங்​கிலாந்​தில் தயாரிக்கப்படும் கார்​கள் மற்​றும் விஸ்​கியை குறைந்த விலையில் பெறும் வாய்ப்​பும் உரு​வாகலாம். அதேசம​யம், சமையல் கலைஞர்​கள், யோகா பயிற்​சி​யாளர்​கள் போன்ற தொழில்​முறை நிபுணர்​கள் எளி​தான பயண வசதி​கள் மற்றும் விசா சலுகைகளால் பயன்​பெறலாம்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இங்கிலாந்து விதிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மீதான 70% வரையிலான வரிகள், கடல்சார் பொருட்கள் மீதான 21%-க்கும் அதிகமான வரிகள், பொறியியல் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் மீதான 18 சதவீத வரிகள், தோல் மற்றும் காலணி தயாரிப்புகள் மீதான 16 சதவீதம் வரையிலான வரிகள் மற்றும் ஜவுளி வகைகள் மீதான சுமார் 12 சதவீத வரிகள் ஆகியவை பூஜ்ஜியமாக குறைக்கப்படும். இது இங்கிலாந்து சந்தையில் இந்திய ஏற்றுமதிகளை கணிசமாக அதிகரிக்கும்.

இந்த ஒப்​பந்​தத்​தின்​படி, இரு நாடு​களுக்​கும் இடையேயான வாகன இறக்​குமதி வரி குறிப்​பிட்ட ஒதுக்கீடு​களின் கீழ் தற்​போதுள்ள சுமார் 110-லிருந்து 10% ஆகக் குறைக்​கப்​படும். முதல் 15 ஆண்​டு​களில் 3.78 லட்​சம் யூனிட்​டு​கள் வரையி​லான வழக்​க​மான இன்​ஜின் கொண்ட இங்​கிலாந்​தின் பயணி​கள் கார்​களை (வெகுஜன சந்தை மாடல்​கள் உட்​பட) சலுகை வரி​யில் இறக்​குமதி செய்ய இந்​தியா அனு​ம​திக்​கும்.

இது​போல 20,000 முதல் 80,000 பவுண்டு வரையி​லான விலை வரம்பில் உள்ள இந்​திய மின்​சார, ஹைபிரிட் மற்​றும் ஹைட்​ரஜன் பயணி​கள் கார்​களுக்​கு, 6-வது ஆண்டிலிருந்து வரி இல்​லாத ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கும். இதன் மொத்த ஒதுக்​கீடு 15-வது ஆண்​டில் 88,000 யூனிட்​டு​களாக உயர்ந்​து, அடுத்​தடுத்த ஆண்டுகளிலும் தொடரும்.

இது டாடா மோட்​டார்​ஸ், மஹிந்​திரா & மஹிந்​திரா மற்​றும் மாருதி சுசூகி போன்ற இந்​திய உற்​பத்​தி​யாளர்​களுக்கு பெரும் பயனளிக்கும். அதே​நேரம், உள்​நாட்டு வெகுஜன சந்தை மின்​சார வாகன பிரிவைப் பாது​காக்க இந்​தியா சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் நாளை முதல் அமல்: முக்கிய அம்சங்கள் என்னென்ன?
ஹார்முஸ் ஜலசந்தி தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு - ஈரான் தூதருக்கு சம்மன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in