பெட்ரோல் பங்க் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது: உலகளவில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்தது

பெட்ரோல் பங்க் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது: உலகளவில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்தது
Updated on
1 min read

புதுடெல்லி: உல​கள​வில் அமெரிக்​கா, சீனா​வுக்கு அடுத்​த​படி​யாக பெட்​ரோல் பங்க்​கு​கள் அதி​கம் உள்ள மூன்றாவது நாடாக இந்​தியா உரு​வெடுத்​துள்​ளது.

இந்​தி​யா​வில் சில்​லரை விற்​பனை பெட்​ரோல் பங்க்​கு​கள் நெட்​வொர்க் கடந்த 10 ஆண்​டு​களில் 2 மடங்​காக அதி​கரித்​துள்​ளது தெரிய வந்​துள்​ளது. தற்​போது ஒரு லட்​சம் பெட்​ரோல் பங்க்​கு​கள் என்ற எண்​ணிக்கை இந்​தியா தாண்​டி உள்ளது.

இதன் மூலம் அமெரிக்​கா, சீனா​வுக்கு அடுத்​த​படி​யாக உலகள​வில் பெட்​ரோல் பங்க்​கு​கள் அதி​கம் உள்ள 3-வது நாடு என்ற சாதனையை இந்​தியா படைத்​துள்​ளது.

அமெரிக்​கா​வில் ஒன்​றரை லட்​சத்​துக்கு மேற்​பட்ட பெட்​ரோல் பங்க்​கு​கள் உள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. அதே​போல் சீனா​வில் ஒரு லட்​சத்து 20 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பெட்​ரோல் பங்க்​கு​கள் உள்​ளன. இந்​தி​யா​வில் தற்​போது ஒரு லட்​சத்து 266 பெட்​ரோல் பங்க்​கு​கள் உள்​ளன.

இதுகுறித்து இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் முன்​னாள் தலை​வர் பி.அசோக் கூறும்​போது, ‘‘கி​ராமப்​புறங்​களி​லும் நிறைய பெட்​ரோல் பங்க்​கு​கள் விரிவு​படுத்​தப்​பட்​டுள்​ளன. அத்​துடன், போட்​டிகள் அதி​கரிப்​பால் நுகர்​வோர் சேவை​யும் மேம்​பட்​டுள்​ளது’’ என்​றார்.

இந்​தி​யா​வில் உள்ள மொத்த பெட்​ரோல் பங்க்​கு​களில், 29 சதவீதம் கிராமப்​புறங்​களில் உள்​ளன. இந்த எண்​ணிக்கை கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்​னர் 22 சதவீத​மாக இருந்​தது. பெட்​ரோல் பங்க் துறை​யில் தனி​யார் பங்கு 10 சதவீதத்​துக்​கும் குறை​வாக உள்​ளது. ரிலை​யன்ஸ் இண்​டஸ்ட்​ரீஸ் நிறு​வனம் நாடு முழு​வதும் 2,100 பங்க்​கு​களை இயக்​கு​கிறது. நயாரா எனர்ஜி 6,900 பங்க்​கு​களை நிர்​வகிக்​கிறது.

கடந்த 10 ஆண்​டு​களில் இந்​தி​யா​வில் பெட்​ரோல் நுகர்வு 110 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. டீசலின் நுகர்வு 32 சதவீதம் உயர்ந்​துள்​ளது என்​று புள்​ளி​விவரங்​கள்​ தெரி​விக்​கின்​றன.

பெட்ரோல் பங்க் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது: உலகளவில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்தது
தேசிய சிறார் விருது பெற்ற ஷ்ரவன் சிங் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in