இந்திய அஞ்சல் துறை ரூ.17,546 கோடி ஈட்ட இலக்கு: மத்திய அமைச்சர் தகவல்

இந்திய அஞ்சல் துறை ரூ.17,546 கோடி ஈட்ட இலக்கு: மத்திய அமைச்சர் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: அஞ்​சல் துறை​யின் மூன்​றாம் காலாண்டு செயல்பாடு​கள் குறித்து மத்​திய தகவல் தொடர்பு அமைச்​சர் ஜோதி​ர் ஆதித்ய சிந்​தியா நேற்று ஆய்​வு​களை மேற்​கொண்​டார்.

பின்னர் அவர் கூறிய​தாவது: ”ஆறு பிரிவு​களில் ஐந்து பிரிவு​கள் வரு​வாய் வளர்ச்​சி​யைப் பதிவு செய்​துள்​ளன. அமெரிக்க அரசால் விதிக்​கப்​பட்ட கட்​டுப்​பாடு​கள் காரண​மாக சர்​வ​தேச அஞ்​சல் பிரிவு எந்த மாற்​ற​மும் இல்​லாமல் வளர்ச்சி நிலை​யான அளவில் உள்​ளது.

நடப்பு 2025- 26ம் நிதி​யாண்​டில் அஞ்​சல் துறை​யின் வருவாய் இலக்கு ரூ.17,546 கோடி​யாகும். இது முந்​தைய நிதியாண்டை விட 30 சதவீதம் அதிகமாகும்.

2023- 24ம் நிதி​யாண்​டில் அஞ்​சல் துறை​யின் வரு​வாய் ரூ.12,800 கோடி​யாக மட்​டுமே இருந்​தது. இந்த நிலை​யில், கடந்த நிதியாண்டு வரு​வா​யுடன் ஒப்​பிடும்​போது நடப்பு நிதி​யாண்​டில் சுமார் 10 மடங்கு அதாவது 30 சதவீத வரு​வாய் அதி​கரிப்​புக்கு இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு ஜோ​தி​ர் ஆதித்ய சிந்தியா தெரி​வித்​தார்​.

இந்திய அஞ்சல் துறை ரூ.17,546 கோடி ஈட்ட இலக்கு: மத்திய அமைச்சர் தகவல்
சரியும் மக்கள் தொகையால் திணறும் சீனா: அரசின் கொள்கையும் சேதாரங்களும் - ஓர் அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in