

புதுடெல்லி: இந்தியாவும் 6 மத்திய கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலும் (ஜிசிசி) தடையற்ற வர்த் தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான விதிமுறைகளில் நேற்று கையெழுத்திட்டன.
இந்த விதிமுறைகள், முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் நோக்கம் மற்றும் வழிமுறைகளை வரையறுக்கின்றன. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் இந்த கையெழுத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்று அமைச்சர் கோயல் தெரிவித்தார்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய 6 நாடுகள் இந்த கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா ஏற்கெனவே மே 2022-ல் ஐக்கிய அரபு அமீரகத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்தியுள்ளது. மேலும், டிசம்பர் 18, 2025 அன்று ஓமனுடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.