வெனிசுலா பூகம்பம் தாக்கம்: இந்தியா​வின் கச்சா எண்ணெய் வர்த்தகத்​தில் பாதிப்பு

வெனிசுலா பூகம்பம் தாக்கம்: இந்தியா​வின் கச்சா எண்ணெய் வர்த்தகத்​தில் பாதிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: தென் அமெரிக்க நாடான வெனிசுலா​வில் ஏற்​பட்ட சக்​தி​வாய்ந்த அடுத்​தடுத்த நிலநடுக்​கங்​கள், அந்​நாட்​டுடன் வேகமாக வளர்ந்து வரும் இந்​தி​யா​வின் கச்சா எண்ணெய் வர்த்தகத்​தில் புதிய கவலைகளை ஏற்​படுத்​தி​யுள்​ளன.

சுமார் 14,000 கிலோமீட்​டர் தொலை​வில் உள்ள இந்​தி​யா​வில் அதன் தாக்​கம் எதிரொலிக்​கக்​கூடும் என்று தொழில் துறை வல்லுநர்​கள் எச்​சரிக்​கின்​றனர்.

இதுகுறித்து எட்மி இன்​சூரன்ஸ் புரோக்​கர்ஸ் நிறு​வனத்​தின் மறுகாப்​பீடு மற்​றும் உலகளா​விய இயற்கை வளங்​கள் பிரி​வின் நிர்​வாக இயக்​குநர் குணால் கன்னா கூறிய​தாவது: மிகக் குறுகிய காலத்​தில் இந்​திய சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களுக்கு கச்சா எண்ணெய் வழங்​கும் முக்​கிய நாடாக வெனிசுலா உருவெடுத்துள்ளது.

எனவே, அந்​நாட்​டின் ஏற்​றுமதி உள்​கட்​டமைப்​பில் ஏற்​படும் எந்தவொரு பாதிப்​பும் சர்​வ​தேச எல்​லைகளைத் தாண்டி இந்தியாவிலும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும். நிலநடுக்​கத்​தால் எண்ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களுக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படா​விட்​டாலும், மின் தடை, போக்​கு​வரத்​துச் துண்​டிப்பு மற்றும் துறை​முகக் கட்​டுப்​பாடு​கள் காரண​மாக கச்சா எண்ணெய் ஏற்​றுமதி பல நாட்​களுக்​குத் தாமத​மாகலாம்.

வெனிசுலா​வின் முக்​கிய சரக்கு போக்​கு​வரத்து நுழை​வாயி​லான ‘லா குவை​ரா' துறை​முகப் பகு​தி​யில் அவசரநிலை பிரகடனப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதனால், கப்​பல் கட்​ட​ணங்​கள், தாமதக் கட்டணங்​கள் மற்​றும் கடல்​சார் காப்​பீட்டு பிரீமி​யம் ஆகியவை கணிச​மாக உயர வாய்ப்​புள்​ளது. இது​வரை அரசி​யல் பதற்​றங்​கள் மற்​றும் பொருளா​தா​ரத் தடைகள் சார்ந்த அபா​யங்​களை மட்​டுமே கணக்​கில் கொண்டு காப்​பீட்​டுக் கட்​ட​ணங்​கள் நிர்​ண​யிக்​கப்​பட்ட நிலை​யில், இனி இயற்கை பேரிடர் அபா​யங்​களை​யும் காப்பீட்​டுத் துறை கணக்​கில் எடுத்​துக்​கொள்ள வேண்​டிய கட்டாயம் எழுந்​துள்​ளது.

இதனால், இந்​தி​யா​வுக்​கான கச்சா எண்​ணெய் விநியோகத்​தில் சிக்​கல் ஏற்​படும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இவ்​வாறு குணால் கண்ணா கூறி​னார். இந்த மாத தொடக்​கத்​தில், பிரதமர் நரேந்​திர மோடி, வெனிசுலா​வின் தற்​காலிக அதிபர் டெல்சி ரோட்​ரிக்​ஸுடன் உயர்​மட்​டப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

இதில் கச்சா எண்​ணெய் தவிர சுரங்​கம், மருந்​துப் பொருட்​கள், ஆட்​டோமொபைல் துறை​களில் இந்​திய நிறு​வனங்​கள் முதலீடு செய்​வது குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது. தற்​போதைய நிலநடுக்கச் சூழல் இந்​தத் திட்​டங்​களில் புதிய மறு​பரிசீலனையையோ அல்​லது கால​தாமதத்​தையோ ஏற்படுத்தலாம்​ எனத்​ தெரிகிறது.

வெனிசுலா பூகம்பம் தாக்கம்: இந்தியா​வின் கச்சா எண்ணெய் வர்த்தகத்​தில் பாதிப்பு
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு 2 விமானங்களில் நிவாரணப் பொருள் - உதவிக்கரம் நீட்டியது இந்தியா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in