காஸ் தட்டுப்பாடு தாக்கம்: வீட்டில் இருந்​து பணியாற்ற எச்சிஎல் அனுமதி

காஸ் தட்டுப்பாடு தாக்கம்: வீட்டில் இருந்​து பணியாற்ற எச்சிஎல் அனுமதி
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்​கா, இஸ்​ரேல்​-ஈ​ரான் போர் காரண​மாக வணிகப் பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர் விநி​யோகம் நிறுத்தப்பட்டுள்​ளது. மேலும், வீடு​களுக்​கான சமையல் காஸ் சிலிண்​டர் பதிவு செய்​யும் கால அளவும் அதிகரிக்கப்பட்​டுள்​ளது.

சிலிண்​டர்​கள் கிடைக்​காத​தால் பல்​வேறு நகரங்​களில் ஓட்டல்​கள் மூடப்​பட்​டுள்​ளன. சென்​னை, மும்​பை, பெங்களூரு, கொல்​கத்தா உள்​ளிட்ட நகரங்​களில் சமையல் காஸ் சிலிண்​டர் விநி​யோகம் பாதிக்கப்பட்டுள்ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது.

இந்​நிலை​யில் எச்​சிஎல் டெக் ஐ.டி. நிறு​வனத்​தின் சென்னை ஊழியர்​கள் வீட்​டிலிருந்தே பணி​யாற்​று​மாறு அந்​நிறு​வனம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. நிலைமை சீராகும் வரை அவர்​கள் வீட்​டிலிருந்தே பணி​யாற்​றலாம் என்​றும், ஊழியர்​களுக்​குத் தேவை​யான உதவி​களை நிறு​வனம் வழங்​கும் என்​றும் எச்​சிஎல் டெக் நிறு​வனம் வெளியிட்டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

காஸ் தட்டுப்பாடு தாக்கம்: வீட்டில் இருந்​து பணியாற்ற எச்சிஎல் அனுமதி
ஈரானின் ‘ஆயில்’ ஆயுதம்... போரில் ட்ரம்ப்புக்கு சேதாரமா? - ஒரு நிலவரப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in