இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் நகை வியாபாரிகளுக்கான ஹால் மார்க்கிங் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் நகை வியாபாரிகளுக்கான ஹால் மார்க்கிங் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Updated on
1 min read

நகை வியாபாரிகள் தன்னார்வமாக ஹால் மார்க்கிங் நடைமுறைகளை ஏற்க வேண்டும். இது வாடிக்கையாளரின் நம்பிக்கையை உயர்த்துவதோடு, எதிர்கால கட்டாய நடைமுறைகளுக்கு தயாராக இருக்க உதவும் என்று இந்திய தர நிர்ணய அமைவன சென்னை கிளை தலைவர் தயானந்த் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட நகை வியாபாரிகள் பயன்பெறும் வகையில், இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில். ஹால் மார்க்கிங் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஆவடியில் நடைபெற்றது. ஹால் மார்க்கிங் தரநிலைகள். ஒழுங்குமுறை விதிமுறைகள் மற்றும் தடையற்ற இணக்கத்துக்காக பிஐஎஸ் வழங்கும் டிஜிட்டல் சேவைகள் குறித் தும், தன்னார்வ இணக்கம் மற்றும் பதிவு செயல்முறை பற்றி யும் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் தயானந்த் பேசியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் ஹால் மார்க்கிங் கட்டாயமாக இல்லாவிட்டாலும், நகை வியாபாரிகள் தன்னார்வமாக ஹால் மார்க்கிங் நடைமுறைகளை ஏற்க வேண்டும். இது நுகர்வோரின் நம்பிக்கையை உயர்த் துவதோடு, எதிர்கால கட்டாய நடைமுறைகளுக்கு தயாராக இருக்க உதவும். தரநிலைகளை முன்கூட்டியே ஏற்றுக்கொள்வது, நகை வியாபாரிகளுக்கு போட்டித் திறனை உயர்த்தும்.

கட்டணச் சுமை இல்லை: விழிப்புணர்வு, திறன் மேம் பாடு மற்றும் டிஜிட்டல் வசதிகள் மூலம் நகைத் துறையில் தரம் மற் றும் வெளிப்படைத் தன்மையை வலுப்படுத்த பிஐஎஸ் தொடர்ந்து செயல்படுகிறது. மேலும், பதிவு செயல்முறை ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படுவதுடன், அதற்கு கட்டணச் சுமை இல்லை. அது ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும். இவ்வாறு அவர் பேசினார்.

அவர் ஹால் மார்க்கிங் திட்டத்தின் முக்கிய விதிமுறைகள், நகை வியாபாரிகளின் ஒழுங்கு முறை பொறுப்புகள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான இந்திய தரநிலைகளின் தேவைகள், ஹால் மார்க்கிங் செயல் முறை மற்றும் தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்து பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் இயக்குநர் ஜீவானந்தம் விரிவாக விளக்கினார். நகைகளின் தூய்மையை உறுதி செய்யவும் தடைசெய்யப்பட்ட மூலப் பொருட்கள் இருப்பதை தவிர்க் கவும் தேவையான தரக் கட்டுப்பாட்டு அம்சங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்

மேலும், இ-பிஐஎஸ் தளம் குறித்து விளக்கி, ஆன்லைன் விண்ணப்பங்களை எளிதாக மேற்கொள்ளலாம் என தெரிவித்தார். நுகர்வோர் புகார் தீர்வு, உரிமச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பொருட்களின் உண்மைத் தன்மை அறிதல் போன்ற வசதிகளுக்காக பிஐஎஸ் கேர் செயலி (BIS Care App)ஐ பயன்படுத்த பங்கேற்பாளர்களை கேட்டுக்கொண்டார். மேலும், தரநிலைகள் தொடர்பான புதிய தகவல்கள் மற்றும் திருத்தங்களை அறிய ஸ்டான்ட் டர்ட்ஸ் வாட்ஜ் (standards Watch) யை கண்காணிக்க ஊக்குவித்தார்.

இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் நகை வியாபாரிகளுக்கான ஹால் மார்க்கிங் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாற்றுப் பாலினத்தினர் உரிமையை பறிக்கும் மசோதாவை திருப்பி அனுப்ப குடியரசுத் தலைவருக்கு கம்யூ. கோரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in