தங்கம் விலை கிராமுக்கு ரூ.370 உயர்வு; வெள்ளி விலை புதிய உச்சம்!

படம்: மெட்டா ஏஐ
படம்: மெட்டா ஏஐ
Updated on
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.28) கிராமுக்கு ரூ.370 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை புதிய உச்சமாக ஒரு கிராம் ரூ.400-க்கு விற்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்​களாகவே தங்​கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரு​கிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.370 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,330 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், பவுனுக்கு ரூ.2,960 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,22,640 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.16,734-க்கும், ஒரு பவுன் ரூ.1,33,872-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ரூ.13 அதிகரித்து ஒரு கிராம் ரூ.400.00 ஆகவும், ஒரு கிலோ ரூ.4,00,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அந்த வகையில் வெள்ளி விலை இன்று புதிய உச்சம் கண்டுள்ளது.

படம்: மெட்டா ஏஐ
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in