தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு
Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை இன்று (ஜூலை 15) காலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இப்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்தது. இந்நிலையில் இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தின்போது சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,180-க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,05,440-க்கும் விற்பனையாகிறது.

18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,000-க்கும், 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,378-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.240-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு
பிரான்ஸ் கனவைத் தகர்த்த ஸ்பெயின் இறுதிக்கு முன்னேற்றம் | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in