தங்கம் விலை மேலும் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

Updated on
1 min read

சென்னை: சென்னையில் இன்று (சனிக்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

கடந்த மாதம் (மே) தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்த நிலையில், இன்று பவுனுக்கு ரூ.480 என்றளவில் உயர்ந்துள்ளது.

அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,860-க்கும், பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,10,880-க்கு விற்பனையாகிறது.

18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,610-க்கும், 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,120-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் ப்ளாட்டினம் ரூ.5,248-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனையாகிறது.

Gold Rate
ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள் 21% உயர்வு: உலகின் முதல் ‘டிரில்லியன் அதிபர்’ ஆனார் எலான் மஸ்க்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in