

சென்னை: கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இந்த மாதத் தொடக்க நாளான நேற்று (ஜூலை 1) காலை, மாலை என இருமுறை உயர்ந்த நிலையில், இன்று, ஜூலை 2-ம் உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1200 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இந்த மாதத் தொடக்க நாளான நேற்று (ஜூலை 1) காலை, மாலை என இருமுறை உயர்ந்த நிலையில், இன்றும் உயர்ந்துள்ளது.
இன்றைய விலை நிலவரத்தை விரிவாகப் பார்ப்போம். சென்னையில் இன்று (ஜூலை 2) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,400-க்கும், பவுனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,07,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,160-க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.89,280க்கும் விற்பனையாகிறது.
24 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.163 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,618-க்கும், பவுனுக்கு ரூ.1,304 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,16,944-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்வு: அதேபோல் சென்னையில் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.205-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,05,000-க்கும் விற்பனையாகிறது.