தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைவு; வெள்ளியும் சரிவு!

படம்: மெட்டா ஏஐ.
படம்: மெட்டா ஏஐ.
Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை இன்று (பிப்ரவரி.2) கிராமுக்கு ரூ.950 குறைந்துள்ளது. 2026 ஜனவரி பிறந்ததில் இருந்து தங்கம் விலை பல உச்சங்களைத் தொட்டு பேரதிர்ச்சியைக் கடத்தி வந்தது. ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது. வெள்ளி விலையும் கடும் ஏற்றங்கண்டது.

இந்தச் சூழலில் மாதக் கடைசி நாட்களான ஜன.30, 31 தேதிகளில் தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கி வாடிக்கையாளர்களை ஆசுவாசப்படுத்தியது.

இந்நிலையில் இன்று (பிப்.2), சென்னையில் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கும் பவுனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு பவுன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.800 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும், பவுனுக்கு ரூ.6,400 குறைந்து ஒரு பவுன் ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சமீப நாட்களாக மிரட்டிவந்த வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.300-க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று தங்கம், வெள்ளி விலை கணிசமாகக் குறைந்துள்ளது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், தொடர்ந்து இதுபோல் குறையுமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

படம்: மெட்டா ஏஐ.
85 நிமிடங்களில் முடிந்த குறுகிய மத்திய பட்ஜெட் உரை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in