

சென்னை: சென்னையில் இன்று (ஏப்.20) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
கடந்த மார்ச் 1 தொடங்கியே தங்கம் விலை வீழத் தொடங்கியது. மேற்காசிய போர் பாதிப்பு இதன் பின்னணியில் இருந்தது. இந்நிலையில், மேற்காசியாவில் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று தற்போது இடைக்கால போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.1,14,400-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.2,80,000-க்கும் விற்பனையாகிறது.
முன்னதாக, இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை நேற்று கொண்டாடப்பட்டது. அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்குவது பொதுமக்களின் வழக்கமாக உள்ளது.
இதையொட்டி, தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். இன்றும் அது தொடர்வதால் இண்றைக்கும் மக்கள் தங்கம், வெள்ளி வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.