தங்கம் விலை பவுனுக்கு ரூ.1200 குறைவு

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

Updated on
1 min read

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 12) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1200 குறைந்து விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

சர்​வ​தேச பொருளாதார நிலவரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்தச் சூழலில், தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் பெரிய அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போர் ஆரம்பித்த நாளில் இருந்தே தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருக்கிறது.

சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,970-க்கும், பவுனுக்கு ரூ.1200 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,19,760-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் 16,331-க்கும்,18 காரட் தங்கம் கிராம் ரூ.12,700-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை இன்று ஒரு கிராம் ரூ.290-க்​கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,90,000-க்​கும் சந்தையில் விற்பனை ஆகிறது. 

<div class="paragraphs"><p>தங்கம் விலை நிலவரம்</p></div>
அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? - ஈரான் போர் நிலவரப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in