புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 ஏற்றம்
கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வலராறு காணாத புதிய உச்சம் தொட்டது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,280 என உயர்ந்தது. இதே போல வெள்ளியை விலையும் கிலோவுக்கு ரூ.12,000 அதிகரித்துள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. கடந்த சில மாதங்​களாகவே தங்​கம் விலை அதிகரித்து வரு​கிறது. சில நேரங்​களில் தங்கம் விலை குறைந்​து, மீண்​டும உயர்​கிறது.

இந்நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 16-ம் தேதி பவுனுக்கு ரூ.480 என குறைந்து, ஒரு பவுன் ரூ.1,05,840 என விற்பனையானது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்​து, ரூ.1,07, 600-க்கு விற்​கப்​பட்​டது

இந்நிலையில், சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று (ஜன.20) கிராமுக்கு ரூ.160 என உயர்ந்து, ரூ.13,610-க்கு விற்​பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ரூ.1,08,880-க்கு விற்பனை ஆகிறது.

24 காரட் சுத்த தங்​கம் பவுன் ரூ.1,18,776-க்கும் விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுன் ரூ.90,840-க்கும் விற்பனை ஆகிறது.

இதேபோல வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிரா​முக்கு ரூ.12 உயர்ந்து, ரூ.330-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து, ரூ.3,30,000-க்​கும் சந்தையில் விற்​பனை ஆகிறது.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
பதற்றமான இறுதி ஆட்டத்தில் மொராக்கோவை வீழ்த்தி பட்டம் வென்ற செனகல் - Africa Cup of Nations

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in