சென்னை: சர்வதேச பொருளாதார சூழல் காரணமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்து, ரூ.94 ஆயிரத்து 160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.230 உயர்ந்து, ரூ.11 ஆயிரத்து 770-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 2,720 ஆக இருந்தது.
அதேநேரத்தில், ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.170 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.5 ஆயிரம் உயர்ந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரமாகவும் இருந்தது.