தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 உயர்வு: இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 உயர்வு: இன்றைய விலை நிலவரம் என்ன?
Updated on
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஏப்.18) பவுனுக்கு ரூ.1,200 என விலை உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்துள்ளது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

மேற்காசியாவில் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது இடைக்கால போர் நிறுத்தம் அமலில் உள்ளது. கூடிய விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில், தங்கம் விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.150 மற்றும் பவுனுக்கு ரூ.1,200 என விலை உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.14,360-க்கும், ஒரு பவுன் ரூ.1,14,880-க்கும் விற்பனை ஆகிறது.

24 காரட் தங்கம் இன்று பவுனுக்கு ரூ.1,312 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,25,328-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.95,840-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு 5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,80,000-க்கும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 உயர்வு: இன்றைய விலை நிலவரம் என்ன?
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்களும் மக்களவை வாக்கெடுப்பில் தோல்வி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in