தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
Updated on
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (மே 16) பவுனுக்கு ரூ.120 என குறைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று கிலோவுக்கு ரூ.15,000 குறைந்துள்ளது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அன்று தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் என மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து அன்றைய தினம் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.670 உயர்ந்தது. தொடர்ந்து 14-ம் தேதி அன்று கிராமுக்கு ரூ.50 என தங்கம் விலை உயர்ந்தது. இந்த சூழலில் நேற்று (மே 15) தங்கம் விலை கிராமுக்கு ரூ.285 என குறைந்தது.

இந்த சூழலில், தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,750-க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.1,18,000-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.136 என விலை குறைந்து, ஒரு பவுன் ரூ.1,28,728-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.290-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
எல்எஸ்ஜி அணிக்கு எதிராக படுதோல்வி: பிளே-ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே முன்னேறும் வாய்ப்பு எப்படி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in