பவுனுக்கு ரூ.800 உயர்ந்த தங்கம் விலை

பவுனுக்கு ரூ.800 உயர்ந்த தங்கம் விலை
Updated on
1 min read

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 3-ம் தேதி) தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தங்கம் விலை அன்றாடம் பல புதிய வரலாற்று உச்சங்களைத் தொட்டது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் பாதியில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.1.25 லட்சத்தை தாண்டி விற்பனையானது. இதன்பிறகு தங்கம் விலை சரிவதும், பின்னர் ஏறுவதுமாக இருந்தது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டாக தாக்குதல் நடத்தியது. அதற்கு அடுத்தநாள் மார்ச் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,26,200 என்ற அளவில் இருந்தது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டது.

மத்திய ஆசிய போரின் காரணமாக, கச்சா எண்ணெய் விலை ஏற, கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலரில் நடைபெறுவதால், டாலர் மதிப்பு உயர்ந்தது. இதனால் தங்கம் விலை குறைந்து வந்தது. அவ்வப்போது சிறிய ஏற்றமும், பின்னர் குறைவதாகவும் இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை இன்று (புதன் கிழமை) கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,850-க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,10,800-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.

பவுனுக்கு ரூ.800 உயர்ந்த தங்கம் விலை
‘பொம்மைக்கு இறுதிச் சடங்கு’ - மனதை ரணமாக்கும் காசா வாழ் மழலைகளின் விளையாட்டு வீடியோ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in