ஒரு பவுன் தங்கம் ரூ.97,720 ஆக சரிவு

ஒரு பவுன் தங்கம் ரூ.97,720 ஆக சரிவு
Updated on: 
1 min read

சென்னை: சர்​வ​தேச பொருளாதார சூழல், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித்தை உயர்த்த போவ​தாக நில​வும் அதிக எதிர்​பார்ப்பு, வலிமையாகும் அமெரிக்க டாலர், அதிக வட்டி தரும் பத்​திரங்​களை முதலீட்​டாளர்​கள் வாங்​கு​வது ஆகிய காரணங்​களால், தங்​கத்​தின் விலை நவ.9-ம் தேதி முதல் குறைந்து வருகிறது.

இதற்​கிடை​யில், 11 மாதங்​களுக்​குப் பிறகு நேற்று முன்​தினம் (நவ.17) ஒரு பவுன் ரூ.1 லட்​சத்​துக்​குக் கீழ் இறங்​கியது. இதன்​தொடர்ச்​சி​யாக, சென்​னை​யில் நேற்​றும் ஆபரணத் தங்​கத்​தின் விலை அதிரடி​யாக குறைந்​தது.

பவுனுக்கு ரூ.2,040 குறைந்து, ரூ.97 ஆயிரத்து 720-க்கு விற்​கப்​பட்​டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.255 குறைந்து, ரூ.12 ஆயிரத்து 215-க்கு விற்​கப்​பட்​டது. 24 காரட் தங்​கம் ரூ.1 லட்​சத்து 6 ஆயிரத்து 600 ஆக இருந்​தது. கடந்த 9 நாட்​களில் மட்​டும் பவுனுக்கு ரூ.8,320 வரை குறைந்​துள்​ளது. இது போல, வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.185 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ரூ.1 லட்​சத்து 85 ஆயிர​மாகவும் இருந்​தது.

ஒரு பவுன் தங்கம் ரூ.97,720 ஆக சரிவு
50 ஆண்​டுகளாகப் பயணிக்​கும் ‘நான்-ஸ்​டாப்’ நாசா விண்​கலம்: பூமி​யில் இருந்து 2,590 கோடி கி.மீ. தூரத்தை எட்​டியது ‘வாயேஜர்-1’

X