தொடரும் சரிவு: தங்கம் விலை ரூ.92,000-க்கு கீழாக வீழ்ச்சி!

தொடரும் சரிவு: தங்கம் விலை ரூ.92,000-க்கு கீழாக வீழ்ச்சி!
Updated on: 
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.21) சில்லரை விற்பனைச் சந்தையில் மீண்டும் குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.45 குறைந்து ரூ.11,465 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.360 குறைந்து ரூ.91,720 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.92,080-க்கும், ஒரு கிராம் ரூ.11,510-க்கும் விற்பனையான நிலையில், இன்று மேலும் சவரனுக்கு ரூ.360 சரிந்துள்ளது.

கடந்த நவம்பர் 17-ஆம் தேதி சுமார் ஓராண்டுக்குப் பிறகு ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் இறங்கிய தங்கம் விலை, அதன் பின்னர் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.185 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.1,85,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது மற்றும் முதலீட்டாளர்களின் போக்கு ஆகியவற்றின் காரணமாகத் தங்கத்தின் விலையில் இந்தத் தொடர் சரிவு பதிவாகியுள்ளது. 

திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு இந்த விலை குறைப்புப் போக்கு மிகுந்த சாதகமாக அமைந்துள்ளது. 

தொடரும் சரிவு: தங்கம் விலை ரூ.92,000-க்கு கீழாக வீழ்ச்சி!
உலகின் 5-வது பெரிய வர்த்தக மையமாக உருவெடுத்த என்எஸ்இ

X