

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பால் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.1 லட்சத்து 5,600-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.100 குறைந்து, ரூ.13,200-க்கு விற்கப்பட்டது. 24 காரட் ரூ.1 லட்சத்து 15,200-ஆக இருந்தது. அதே நேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, கிராம் ரூ.245 ஆகவும், கிலோ கட்டி வெள்ளி ரூ.2,45,000 ஆகவும் இருந்தது.