தங்கம் விலை 5 நாளில் ரூ.5,000+ சரிவு - காரணம் என்ன?

தங்கம் விலை 5 நாளில் ரூ.5,000+ சரிவு - காரணம் என்ன?
Updated on: 
1 min read

சென்னை: நவம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை அதிரடியாக சரிந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று (நவ.14) காலை சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 என்று சரிந்தது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அமெரிக்க இடைத்தேர்தல் மற்றும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள், ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு இடையிலான கருத்து முரண்பாடு குறித்த தகவல், அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் காரணத்தால் சர்வதேச அளவில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதாக வணிக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.960 என்று குறைந்தது.

இன்றைய விலை விவரம்

சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,615-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,00,920-க்கு விற்பனை ஆகிறது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் ரூ.5,000-க்கு மேலாக சரிந்துள்ளது கவனிக்கத்தக்கது.

24 காரட் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.696 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,10,096-க்கும், 18 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு பவுன் ரூ.82,640-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றிமின்றி ஒரு கிராம் ரூ.195-க்கும், ஒரு கிலோ ரூ.1,95,000-க்கும் விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களுக்கு வட்டி அதிகரிப்பு, முதலீட்டாளர்கள் லாப நோக்குடன் தங்கத்தை விற்பனை செய்வது, சர்வதேச பதற்றம் தணிவதால் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை குறைவது உள்ளிட்ட காரணிகளால் ஆபரணத் தங்கம் விலையும் வெகுவாக சரிந்து வருகிறது.

தங்கம் விலை 5 நாளில் ரூ.5,000+ சரிவு - காரணம் என்ன?
“மேகேதாட்டு குறித்து மோடி மேடையில் டி.கே.சிவகுமார் பேசியதை ஏற்க முடியாது” - மாணிக்கம் தாகூர்

X