தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.520 உயர்வு

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.520 உயர்வு
Updated on
1 min read

சென்னை: சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சென்னையில் இன்று (ஆக.8) பவுனுக்கு ரூ.520 என்று உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்க விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று (வெள்ளிக்கிழமை) தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 என அதிகரித்து விற்பனையானது.

இன்றைய விலை விவரம்

இந்தச் சூழலில் சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,965-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,11,720-க்கு விற்பனையாகிறது.

24 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.71 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,234-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று சந்தையில் மாற்றமின்றி விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.520 உயர்வு
Vivo S2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in