சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
Updated on: 
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சென்னையில் உயர்ந்துள்ளது. இன்று காலை சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.160 என ஏற்றம் கண்டது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,960 என்று குறைந்திருந்தது.

இன்றைய விலை விவரம்

சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,160-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,05,280-க்கு விற்பனை ஆகிறது.

24 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.176 உயர்ந்து, ஒரு பவுன் 1,14,856-க்கும், 18 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.64 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.86,144-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.205-க்கும், ஒரு கிலோ ரூ.2,05,000-க்கும் விற்பனை ஆகிறது.

சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் ஷமி ஓய்வு

X