தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 சரிவு: இன்றைய சந்தை நிலவரம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 சரிவு: இன்றைய சந்தை நிலவரம்
Updated on
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (செப்.7) காலை பவுனுக்கு ரூ.480 என சரிந்தது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்க விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதோடு கடந்த 1-ம் தேதி நாட்டு மக்களிடம் தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது. கடந்த சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,360 குறைந்தது.

இன்றைய விலை விவரம்: இந்தச் சூழலில் சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,130-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,13,040-க்கு விற்பனையாகிறது.

24 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,415-க்கு விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,900-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 சரிவு: இன்றைய சந்தை நிலவரம்
எஸ்ஐஆர் பணியில் இந்திய மக்கள் தொகையில் 15% பேர் நீக்கம்: முன்னாள் தேர்தல் ஆணையர் புகார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in