தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம்
Updated on
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஏப்.4) பவுனுக்கு ரூ.800 என உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

மேற்காசிய போர் பதற்றம், சர்வதேச பொருளாதார சூழல், கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 மற்றும் பவுனுக்கு ரூ.800 என விலை உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் ரூ.13,950-க்கும், ஒரு பவுன் ரூ.1,11,600-க்கும் விற்பனை ஆகிறது.

24 காரட் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.15,218 மற்றும் ஒரு பவுன் ரூ.1,21,744-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255, கட்டி வெள்ளி கிலோ ரூ.2,55,000-க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம்
Realme 16 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in