தொடர் சரிவுக்கு பிறகு சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய சந்தை நிலவரம்?

தொடர் சரிவுக்கு பிறகு சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய சந்தை நிலவரம்?
Updated on
1 min read

சென்னை: தொடர் சரிவுக்கு பிறகு சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 7) பவுனுக்கு ரூ.720 என உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி, எரிவாயு சிலிண்டரின் விலையேற்றத்துக்கு மத்தியில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்தச் சூழலில், தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் பெரிய அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த போரினால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் நிலவுவதாக தகவல்.

தங்கம் விலை மார்ச் 2-ம் தேதி பவுனுக்கு ரூ.920 என குறைந்தது. அதன் பின்னர் மார்ச் 3 - ரூ.1,560, மார்ச் 4 - ரூ.2,120, மார்ச் 5 - ரூ.640, மார்ச் 6 - ரூ.1,280 என விலை குறைந்தது. இந்த சூழலில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,050-க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,20,400-க்கும் விற்பனை ஆகிறது.

24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.784 என விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,31,344-க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.320 என விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,04,560-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை ஆகிறது.

தொடர் சரிவுக்கு பிறகு சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய சந்தை நிலவரம்?
“பும்ரா எனும் ஜீனி” - ஃபாப் டு பிளெஸ்ஸி புகழாரம் | T20 WC 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in