தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்வு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
Updated on
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (மார்ச் 10) பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 என உயர்ந்துள்ளது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்தச் சூழலில், தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் பெரிய அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த போரினால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் நிலவுவதாக தகவல். இந்திய பங்குச் சந்தையும் கடும் வீழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,050-க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,20,400-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.872 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,31,344-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.3,00,000-க்​கும் சந்தையில் விற்பனை ஆகிறது. பிளாட்டினம் விலை கிராமுக்கு ரூ.201 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,444-க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
“ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது இருபது மடங்கு தாக்குதல்” - ட்ரம்ப் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in