தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைவு: இன்றைய சந்தை நிலவரம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைவு: இன்றைய சந்தை நிலவரம்
Updated on
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 31) பவுனுக்கு ரூ.800 என குறைந்தது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.5,000 என குறைந்துள்ளது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் மீதும் எதிரொலிக்கிறது.

நேற்று காலை தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், மாலை மீண்டும் அதிகரித்தது. நேற்று மாலை ஒரு பவுன் தங்கம் ரூ.1,10,160-க்கு விற்பனையானது. இந்தச் சூழலில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை மீண்டும் குறைந்தது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,670-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,09,360-க்கும் விற்பனை ஆகிறது.

24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.872 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,19,304-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.2,400 குறைந்து, ஒரு பவுன் ரூ.91,680-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.250-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைவு: இன்றைய சந்தை நிலவரம்
சரிவுக்குப் பின் ஏற்றம்: தங்கம் விலை ரூ.880 உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in