

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 30) பவுனுக்கு ரூ.880 உயர்ந்து, ரூ.1,10,160-க்கு விற்பனையானது.
மேற்காசிய போர் பதற்றம் மற்றும் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்க போவதில்லை என்று அறிவிப்பு போன்ற காரணங்களால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக தங்கம் விலை குறைந்து வந்தது. இதன் பிறகு, தங்கம் விலை ஏறுமுகமாக இருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,600-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,08,800-க்கும் விற்பனை ஆனது.
பின்னர், மாலையில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்து, ரூ.1,10,160-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.110 உயர்ந்து, ரூ.13,770-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.1,20,176 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.255 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ரூ.2,55,000 ஆக இருந்தது.