

சென்னை: ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 440-க்கு விற்கப்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் நிலை காரணமாக தங்கத்தின் விலை கடந்த 16-ம் தேதி வரை ஏற்ற இறக்கமாக இருந்தது. இதன்பிறகு, படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இதன்தொடர்ச்சியாக, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 440-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.210 உயர்ந்து, ரூ.13,430-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 208 ஆக இருந்தது.
ஒரு பவுன் தங்கம் கடந்த 17-ம் தேதி ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800 ஆக இருந்தது. இதன்மூலம், கடந்த 5 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,640 வரை உயர்ந்துள்ளது.
நேற்று வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.245 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரித்து, ரூ.2 லட்சத்து 45 ஆயிரமாகவும் இருந்தது.