விசாரணை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்தக் கூடாது என கோரிக்கை: செந்தில் பாலாஜி, அசோக்குமார் மனுக்கள் தள்ளுபடி

செந்தில் பாலாஜி, அசோக்குமார்

செந்தில் பாலாஜி, அசோக்குமார்

Updated on
2 min read

சென்னை: வி​சா​ரணை என்ற பெயரில் தங்​களை துன்​புறுத்​தக்​கூ​டாது என போலீ​ஸாருக்கு உத்​தர​விடக்​கோரி திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது சகோ​தரர் அசோக்​குமார் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​களை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

ஊத்​தங்​கரை தவெக எம்​எல்​ஏ-​வான இளை​ய​ராஜா​விடம் குதிரை பேரம் நடத்​தி​ய​தாக திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் பதிவு செய்​துள்ள வழக்​கில் திமுக முன்​னாள் அமைச்​ச​ரான செந்​தில்​பாலாஜி மற்​றும் அவரது சகோ​தரர் அசோக்​குமார் மீதும் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்​கில் இரு​வருக்​கும் உயர் நீதி​மன்​றம் நிபந்​தனை முன்​ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டுள்​ளது. இந்​நிலை​யில் இந்த வழக்​கில் விசா​ரணை என்ற பெயரில் தங்​களை வரவழைத்து துன்​புறுத்​தக்​கூ​டாது என போலீ​ஸாருக்கு உத்​தர​விடக்​கோரி செந்​தில் பாலாஜி​யும், அசோக்​கு​மாரும் மீண்​டும் உயர் நீதி​மன்​றத்​தில் மனுக்​களைத் தாக்​கல் செய்​திருந்​தனர்.

அதில், ‘அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா சமீபத்​தில் கரூர் சம்​பவம் தொடர்​பாக தீர்க்​கப்பட வேண்​டிய கணக்கு ஒன்று உள்​ளது என வெளிப்​படை​யாக மிரட்​டல் விடுக்​கும் வகை​யில் பேசி​யுள்​ளார். அதன்​படி ஏதேனும் ஒரு வழக்​கில் எங்​களை கைது செய்ய போலீ​ஸாருக்கு அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. ஊத்தங்​கரை தவெக எம்​எல்​ஏ-​விடம் குதிரை பேரம் நடத்​தி​ய​தாக பதி​யப்​பட்​டுள்ள வழக்​கில் எங்​களை போலீஸ் காவலில் வைத்து விசா​ரிக்க வேண்​டிய அவசி​யமில்லை எனக்​கூறி உயர் நீதி​மன்​றம் முன்​ஜாமீன் வழங்​கி​யுள்ள நிலை​யில், தொடர்ந்து போலீ​ஸார் சோதனை நடத்தி வரு​கின்​றனர். சட்​டப்​படி​யான எந்த புலன் விசா​ரணை​யை​யும் நாங்​கள் தடுக்​க​வில்​லை. காவல்​துறை​யில் நிலு​வை​யில் உள்ள வழக்​கின் விசா​ரணைக்கு நாங்​கள் தேவைப்​படு​வ​தாக இருந்​தால் சட்​டப்​படி முறை​யாக நோட்​டீஸ் அனுப்ப போலீ​ஸாருக்கு உத்​தர​விட வேண்​டும். குறிப்​பாக விசா​ரணை மற்​றும் சோதனை என்ற பெயரில் எங்​களை துன்​புறுத்​தக்​கூ​டாது என போலீ​ஸாருக்கு உத்​தர​விட வேண்​டும்’ எனக் கோரப்​பட்​டிருந்​தது.

இந்த மனுக்​கள் மீதான விசா​ரணை நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​பாக நடந்​தது. அப்​போது மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஜான் சத்​யன் ஆஜராகி, மனு​தா​ரர்​கள் தங்​களை போலீ​ஸார் துன்​புறுத்​தக்​கூ​டாது என பொத்​தாம் பொது​வான உத்​தர​வைக் கோரு​கின்​றனர்.

இந்த விவ​காரத்​தில் காவல்​துறை மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களைக் கூறி​யுள்​ளனர். எனவே இதுதொடர்​பாக விரி​வாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்​டும், எனக் கோரி​னார்.

செந்​தில்​பாலாஜி, அசோக்​கு​மார் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் என்​.ஆர்​.இளங்கோ, குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் பெற்​று உள்ள மனு​தா​ரர்​களை வேறு வழக்​கில் போலீ​ஸார் கைது செய்​யக்​கூடும் என்ற அச்​சம் உள்​ளது. இந்த வழக்​கின் விசா​ரணை​யில் மனு​தா​ரர்​கள் தலை​யீடு செய்​ய​வில்​லை. மாறாக விசா​ரணை என அழைத்து துன்​புறுத்​தக்​கூ​டாது எனக் கோரு​கிறோம், என்​றார்.

இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்​திரையன், ‘தவெக எம்​எல்​ஏ-​விடம் குதிரை பேரம் நடத்​தி​ய​தாக பதி​யப்​பட்ட வழக்​கில் மனு​தா​ரர்​களுக்கு முன்​ஜாமீன் வழங்​கப்​பட்​டும், இன்​னும் அவர்​கள் விசா​ரணை நீதி​மன்​றத்​தில் சரணடைந்து ஜாமீன் பெற​வில்​லை. இந்த சூழலில் தங்​களை துன்​புறுத்​தக்​கூ​டாது எனக்​கோர முடி​யாது. மற்ற வழக்​கு​களை பொருத்​தமட்​டில் முன்​கூட்​டியே இந்த மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ள​தால் மனு​தா​ரர் கோரி​யுள்​ளபடி எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்க முடி​யாது’ எனக்​கூறி மனுக்​களை தள்​ளு​படி செய்​து உத்​தர​விட்டுள்​ளனர்​.

<div class="paragraphs"><p>செந்தில் பாலாஜி, அசோக்குமார்</p></div>
இந்திய அஞ்சல் துறை பெயரில் புதிய வகை சைபர் மோசடி: பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in