மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை

மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை
Updated on
1 min read

சென்னை: ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1 லட்​சத்து 2,160 எனும் புதிய உச்​சத்தை தொட்​டது.

தங்​கத்​தின் விலை டிச.12-ல் ரூ.98,960 ஆக இருந்தது. டிச.15-ல் ரூ.1 லட்​சத்தை தாண்டி வரலாறு படைத்தது. இந்நிலை​யில்​, நேற்று ரூ.1 லட்​சத்து 2,160 என்ற புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்தது. ஒரு கிராம் தங்​கம் ரூ.200 உயர்ந்​து ரூ.12,770-க்கு விற்​கப்​பட்​டது.

இது​போல, வெள்ளி விலையும் கணிச​மாக உயர்ந்​தது. கிரா​முக்கு ரூ.3 உயர்ந்​து, ரூ.234 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் உயர்ந்​து, ரூ.2 லட்​சத்து 34 ஆயிர​மாக இருந்​தது.

மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை
டிச.27-ம் தேதி மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி சபரிமலைக்கு புறப்பட்டது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in